இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி “ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானில் குண்டு மழை பொழிவதற்கும், பேரழிவை ஏற்படுத்தவும் அமெரிக்கா தயாராக உள்ளது” என்று டிரம்ப் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance), ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் தாங்களும் ஒத்துழைக்கத் தயார் என்றும், ஆனால் எங்களோடு விளையாட நினைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.


