சம்பவத்தின்படி, அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் நோக்கி செல்லும் கலிபாப், தன் விமானப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவருக்கு அருகில் இருந்த காலி இருக்கைகளில் ஈரானின் மினாப் பகுதியில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போர் உச்சமாக இருந்த நேரத்தில், ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண் குழந்தைகள் பள்ளியின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பல பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 165 பேர் வரை இந்தத் தாக்குதலில் இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மட்டுமன்றி, உடன் வேறொன்றையும் தன்னோடு எடுத்துச் செல்கிறார் கலிபாப். அது, அக்குழந்தைகளின் ரத்தம் படிந்த புத்தகப் பைகள்.


