• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Jan Vishwas Bill 2026 : ஜன் விஸ்வாஸ் மசோதா 2026.. 79 மத்திய சட்டங்களில் அதிரடி மாற்றம்.. மோடி அரசின் அடுத்த நடவடிக்கை… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Jan Vishwas Bill 2026 : ஜன் விஸ்வாஸ் மசோதா 2026.. 79 மத்திய சட்டங்களில் அதிரடி மாற்றம்.. மோடி அரசின் அடுத்த நடவடிக்கை… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏப்ரல் 2026-ன் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ‘நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை’ நோக்கிய மைல் கல் என்று பாராட்டப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் 23 அமைச்சகங்களின் கீழ் வரும் 79 மத்திய சட்டங்களில் உள்ள 784 விதிகள் திருத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமான அம்சமாக, 717 சட்ட விதிகள் குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது, சிறிய அளவிலான தொழில்நுட்பத் தவறுகள் அல்லது நடைமுறைப் பிழைகளுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறைத்தண்டனை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

அதற்குப் பதிலாக, அபராதங்கள், எச்சரிக்கைகள் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே இனிமேல் எடுக்கப்படும். இது சாதாரண வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் நிலவி வந்த தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.

இந்த மசோதாவில் உள்ள மீதமுள்ள 67 விதிகள், சாதாரண குடிமக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏப்ரல் 1-ம் தேதி மக்களவையிலும், ஏப்ரல் 2 மற்றும் 3-ம் தேதிகளில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சட்டத்தை “பயத்தை அடிப்படையாகக் கொண்ட காலாவதியான நிர்வாக முறையில் இருந்து, நவீன காலத்திற்கு ஏற்ற நம்பிக்கை சார்ந்த நிர்வாக முறைக்கு மாறுவதற்கான ஒரு முயற்சி” என்று பாராட்டியுள்ளார். இதன் மூலம் தேவையற்ற நீதிமன்ற வழக்குகள் குறைவதுடன், இந்தியாவில் தொழில் தொடங்குவதும், நடத்துவதும் முன்பை விட மிகவும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதாவின் நான்கு முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-

எச்சரிக்கை முறை (Warning-First): முதல்முறை தவறு செய்யும் போது, உடனடியாக அபராதம் விதிக்காமல், அரசு தரப்பில் எச்சரிக்கை அல்லது அறிவுரை வழங்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மட்டுமே தண்டனை உண்டு.

அபராதமாக மாற்றம்: தொழில்நுட்பப் பிழைகளுக்காக வழங்கப்பட்டு வந்த சிறைத்தண்டனை நீக்கப்பட்டு, அதற்குப் பதில் நியாயமான அளவிலான பண அபராதம் (Civil Penalty) விதிக்கப்படும்.

வேகமான தீர்வு: வழக்குகளை நீதிமன்றத்திற்கு இழுக்காமல், இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவாகத் தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 5 கோடி நிலுவை வழக்குகளின் சுமையைக் குறைக்க உதவும்.

பணவீக்கத்திற்கேற்ப அபராதம்: அபராதத் தொகையானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 10% உயர்த்தப்படும். இது அபராதத் தொகையை நடைமுறைக்கு ஏற்றதாக வைத்திருக்கும்.

Read More

Previous Post

40 நாளில் ஈரானை சுடுகாடாக்கிய இஸ்ரேல் : வெளியான தாக்குதல் விபரம்

Next Post

Iran Landmines | கடலில் கண்ணிவெடிகள்… போரே நின்றாலும் உலக வர்த்தகம் சரியாகாது? உலகையே நடுங்க வைக்கும் ஈரான்; அம்பலமான அதிர்ச்சி உண்மை! | War Updates | உலகம் போட்டோகேலரி

Next Post
Iran Landmines | கடலில் கண்ணிவெடிகள்… போரே நின்றாலும் உலக வர்த்தகம் சரியாகாது? உலகையே நடுங்க வைக்கும் ஈரான்; அம்பலமான அதிர்ச்சி உண்மை! | War Updates | உலகம் போட்டோகேலரி

Iran Landmines | கடலில் கண்ணிவெடிகள்... போரே நின்றாலும் உலக வர்த்தகம் சரியாகாது? உலகையே நடுங்க வைக்கும் ஈரான்; அம்பலமான அதிர்ச்சி உண்மை! | War Updates | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin