அதே போல அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருந்தாலும், அமெரிக்காவைத் தங்களால் நம்ப முடியாது என்று ஈரானும் திட்டவட்டமாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாப் பேசுகையில், “ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஒரு நாடகம் போலவோ, ஏமாற்று வேலையாகவோ கையாண்டால், ஈரான் தனது சொந்த ராணுவ வலிமையைக் கொண்டு தனது நலன்களைப் பாதுகாக்கும்” என்றுள்ளார்.

