Last Updated:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ககன்யான் திட்டத்தின் இரண்டாவது கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கல மாதிரியை வளிமண்டலத்தில் இருந்து தரையிறக்கும் ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தியது.
அதன்படி இந்திய விமான படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ஏறத்தாழ 6 டன் எடையுள்ள விண்கல மாதிரி 3 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட நிலையில், பாராசூட் உதவியுடன் விண்கல மாதிரி கடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய கடற்படை மூலம் விண்கல மாதிரி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தியது. ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.


