கோலாலம்பூர், ஏப் 10:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, மலேசிய அரசு ஏற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மானியச் செலவு 600 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அசிசான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மானியச் செலவு 700 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்விலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றமின்றி மலேசிய அரசு நிலைநிறுத்தியுள்ளது.
மீனவர்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குத் தொடர்ந்து மானிய விலையில் டீசல் வழங்கப்படுவதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
பெட்ரோனாஸ் நிறுவனத்தின் சிறப்பான மேலாண்மையால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் எரிபொருள் இருப்பு வலுவாக உள்ளது. இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




