“நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்’ என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதனால், நேட்டோவில் இருந்து விலகும் பிளானிலும் இருக்கிறார்.
“நேட்டோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா உண்மையில் நினைத்தால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தே இருக்கும். ஆனால், இப்போதிருக்கும் நிலையில் இல்லை.
இப்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல நாடுகள் தேவை என்று நினைக்கிறேன்.
அவை ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன், துருக்கி மற்றும் நார்வே – ஐரோப்பிய நாடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நான்கு நாடுகள்.
ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன் மற்றும் துருக்கியின் ராணுவங்களை ஒன்றாக சேர்த்தால், அது ரஷ்யாவின் ராணுவத்தைவிட வலுவாக இருக்கும்.

