கோலாலம்பூர் | ஏப்ரல் 10, 2026
சிறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர் தங்களின் ஒப்பந்தம் தொடர்பான பிணக்குகளை (Contract Disputes) எவ்வித சட்டச் செலவுகளுமின்றித் தீர்த்துக் கொள்ள, மலேசிய மத்தியஸ்த மையம் (MMC) புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
B40 மற்றும் M40 வருமானப் பிரிவினருக்காக ‘புரோ போனோ’ (Pro Bono) எனப்படும் இலவச மத்தியஸ்த சேவையை MMC வழங்கவுள்ளது என்று, சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.
இதற்கான முழுச் செலவுகளையும் மத்தியஸ்த மையமே ஏற்கும். இதனால் பொதுமக்கள் வழக்கறிஞர் கட்டணம் அல்லது நீதிமன்றக் கட்டணம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
B40 மற்றும் M40 வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு ஒப்பந்ததாரர்கள், ஃப்ரீலான்ஸர்கள் (Freelancers), வீடியோகிராபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (Event Organisers).
நிலுவையில் உள்ள கட்டணங்கள் அல்லது ஒப்பந்தப் பிணக்குகளின் மதிப்பு 250,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
ஒரு பிரச்சனையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன்பே, இரு தரப்பினரையும் அழைத்துச் சுமுகமாகப் பேசி முடிக்க இந்த மையம் உதவும்.
நீதிமன்ற வழக்குகளைப் போல மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மிக விரைவாகத் தீர்வு காண முடியும்.
சட்டப் போராட்டத்தைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதால், தொழில்முறை உறவுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த முன்னோடித் திட்டம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முறையான ஒப்பந்தம் இருந்தும் பணம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




