அம்பாந்தோட்டை – அம்பலாந்தோட்டையில் இரு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில்
மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை, பொலான – உட பரகம பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்முறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், ரிதியகம – பொலானா பகுதியைச் சேர்ந்த அம்பலாந்தோட்டை பொலான கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 16 வயது பாடசாலை மாணவி சனேத் அவிஷ்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவி உயிரிழப்பு
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில், மற்றொரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

