Last Updated:
42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, சாக்குபையில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில், சாக்குபையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மசந்திராவில் தொழிற்பேட்டைக்கு அருகே சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, சாக்குபையில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் ரத்தம் வழிந்த நிலையில் கடந்த சாக்குப்பையைப் பார்த்து அதிர்ந்து போயினர். இதையடுத்து அவர்கள் உடனே காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த ஹெப்பக்கோடி போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய ஆய்வில் உயிரிழந்து கிடந்தவர் 42 வயதான சுனில் நாயக் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், வேறு மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பாசுதேவ் மல்லிக் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திருமணத்தை மீறிய உறவு கொடூரக் கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது. மேலும் சுனில் நாயக்கின் மனைவி புஷ்பாவுடன் கைதான பாசுதேவ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்த விவசாரம் சுனில் நாயக்கிற்கு தெரியவரவும் இருவரையும் கடுமையாகக் கண்டித்தள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாசுதேவ், புஷ்பாவுடனான தனது உறவைத் தடையின்றித் தொடர்வதற்காக, சுனில் நாயக்கைக் கொன்று விடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, மது அருந்தலாம் எனக் கூறி சுனில் நாயக்கதை அழைத்துச் சென்றுள்ளார் பாசுதேவ்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் மீட்டுள்ளனர். சாக்குப்பையில் சடலத்தை திணித்து வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு.. கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கைதானவர் சொன்ன பகீர் வாக்குமூலம்


