Last Updated:
ஈரான் மோதல் தாக்கத்தை சமாளிக்க இந்தியா உரம், விமான கட்டணம், வணிக கடன் சலுகை, பெட்ரோல் டீசல் வரி குறைப்பு மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்துகிறது
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலக அளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தாலும், எரிசக்தி விநியோகம், வர்த்தகப் பாதைகள், பொருட்களின் விலை உள்ளிட்டவற்றில் பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தனது பொருளாதாரத்தை பாதுகாக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கான உரம், பயணிகளுக்கான விமான கட்டணங்கள், வணிகர்களுக்கான கடன்கள், பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி நுகர்வோருக்கான பணச் சுமை குறைக்க எரிபொருள் மீதான வரி குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகள் முதல் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வரை! ஈரான் மோதலின் தாக்கத்தைத் தணிக்க இந்தியா என்ன செய்கிறது?


