அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பாகக் கூடுதல் விளக்கங்களைக் கோரியுள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரானின் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஹார்முஸ் நீரிணையை நிபந்தனையற்ற முறையில் மீண்டும் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அபுதாபி உறுதியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏவுகணைச் சோதனை
மற்ற வளைகுடா நாடுகள் இந்தப் போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ள நிலையில் போரின் போது ஈரானால் ஏற்பட்ட சேதங்களுக்கு அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என அமீரகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அதன் ஆதரவுப் படைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் கையாளும் ஒரு விரிவான மற்றும் நீடித்த அணுகுமுறைக்கு அமீரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமீரக ஜனாதிபதியின் ஆலோசகர் அன்வர் கார்காஷ், “உபசாரங்களுக்கான காலம் கடந்துவிட்டது இப்போது வெளிப்படைத்தன்மை அவசியமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் இனிவரும் காலங்களில் கூட்டு நிலைப்பாடு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்தம் எட்டப்பட்ட பிறகும் அமீரக நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

