கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டு SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பயில இடம் வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இனம், மதம் அல்லது பின்னணி என எந்தப் பாகுபாடுமின்றி, தகுதியுள்ள அனைத்துச் சிறந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் அரசின் கொள்கைப்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 10A எடுத்த சுமார் 6,700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகுதியிருந்தும் இதுவரை இடம் கிடைக்கப் பெறாத மாணவர்கள், கல்வி அமைச்சின் (MOE) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக உடனடியாக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகச்சிறந்த திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தாய்நாட்டிலேயே தக்கவைத்துக்கொள்வதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் என கல்வி அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.




