ஏர் ஆசியா எக்ஸ் குழுமம் டான்ஸ்ரீ ஜமாலுடினை சுயேச்சை நிர்வாக அதிகாரமற்ற தலைவராக முறைப்படி வரவேற்றது. உலகளாவிய விமானப் போக்குவரத்து சந்தைகளில் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள், அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையைச் சமாளிப்பதற்கான தனது உத்தியை இக்குழுமம் கோடிட்டுக் காட்டியது. டான்ஸ்ரீ ஜமாலுடினின் தலைமையின் கீழ் குழுமம் ஒரு புதுப்பிக்கப்பட்ட கவனம், வளர்ச்சிக் காலத்திற்குள் நுழையும் வேளையில் அதற்கு அவசியமான சுதந்திரமான மேற்பார்வையையும் நீண்டகாலப் கட்டமைப்பையும் வாரியம் உற்று நோக்குகிறது. அதிகரித்து வரும் சிக்கலான செயல்பாட்டுச் சூழல் இருந்தபோதிலும் குழுமம் தனது மீள்திறன் கொண்ட வணிக மாதிரி, வலுவான ஆசியான் வலையமைப்பு, பிராந்தியத்தின் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றில் நம்பிக்கையுடன் உள்ளது. இது தொடர்ந்து வலுவான பயணத் தேவையைக் காண்கிறது. தடையற்ற, மலிவு விலையிலான பிராந்திய இணைப்புக்கான தனது முக்கிய மையமாக கோலாலம்பூரை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
ஏர் ஆசியா எக்ஸ் ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவிற்கு இடையே பயணிகளை இணைக்கும் ஒரு முக்கிய முதன்மை மையமாக பஹ்ரெய்னை மேம்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இச்சேவை 2026 ஜூன் 26ஆம் நாள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் பிராந்தியத்தின் நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இது தொடங்கப்படுகிறது. இடம்பெயர்ந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்மாட்டி (கஸகஸ்தான்), டாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்), இஸ்தான்புல் (துருக்கி) போன்ற சிறப்பாகச் செயல்படும், அதிக வருவாய் ஈட்டும் வழித்தடங்களுக்கு குழுமம் முன்கூட்டியே திறனை மறுஒதுக்கீடு செய்துள்ளது. அதே நேரத்தில், ஜோகூர் பாருவில் உள்ள செனாயில் அமைந்துள்ள தங்களின் முக்கிய உள்நாட்டு மையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது.
ஏர் ஆசியா எக்ஸ்-இல் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக சமீபத்தில் ஏழு விமான நிறுவனங்களும் குறுகிய, நடுத்தர தூர விமான நிறுவனங்களுவிமான தூர ஒன்றி ணைக்க ப்பட்ட பிறகு நாம் உலகளாவிய நிச்சயமற்ற காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இந்த கட்டத்திற்குள் நாம் ஒரு பலமான நிலையில் நுழைகிறோம். குழுமத்தின் அடிப்படைகள் உறுதியானவை அவை சிக்கனமான, ஒழுக்கமான செலவுக் கட்டமைப்பு, மீள்திறன் கொண்ட ஆசியான் – மையப்படுத்தப்பட்ட வலையமைப்பு, வலுவான Fly- Thru ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றன என்று ஏர் ஏசியா எக்ஸ்-இன் சுதந்திரமான நிர்வாக மற்ற தலைவர் டான் ஸ்ரீ ஜமாலுடின் இப்ராஹிம் கூறினார்.
விமான செயல்பாட்டுத் திறனையும் சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்காக எனது சக வாரிய உறுப்பினர்கள், ஏா ஆசியா எக்ஸ் நிர்வாகக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் நாங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தின் மீது மேலும் கட்டியெழுப்ப வேண்டும். தற்போதைய சவால்கள் நிறுவனங்களைத் தாண்டி, விமானப் போக்குவரத்துச் சூழல் அமைப்பில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளன. இருப்பினும், இத்துறையின போட்டித்திறனை வலுப்படுத்தவும் நீண்டகால வளர்ச்சிக்குச் சிறந்த நிலையில் இந்தக் காலகட்டத்திலிருந்து வெளிவரவும் நமது கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற இது ஓர் உகந்த நேரத்தை வழங்குகிறது. எங்கள் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதோடு இன்னும் பல இடங்களுக்குச் சேவையாற்றும் எங்கள் திறனை வலுப்படுத்தும் வகையில் எங்கள் விமானங்களுக்கான பதிவு குறிப்புகளை விரிவு படுத்துவதற்கும் கூடுதலாக விமானங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்குமான சாத்தியக்கூறுகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.
ஒருங்கிணைந்த விமான நிறுவனக் குழுமம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வேளையில் டான்ஸ்ரீ ஜமாலுடினின் சிறப்பான தலைமைத்துவமும் ஆழ்ந்த நிர்வாக நிபுணத்துவமும் ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமானவை. அவரது தலைமைத்துவம் எங்கள் நிர்வாகக் குழுவின் வலிமைக்கு வலுசேர்க்கும் வகையில் எங்கள் வாரியம் கடைப்பிடிக்கும் நிர்வாக ஆழத்தையும் சுதந்திரமான மேற்பார்வையையும் கொண்டுவருகிறது. அவரது தலைமையின்கீழ் ஏர் ஆசியா எக்ஸ் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு எங்கள் விருந்தினர்கள், கூட்டாளர்கள், முதலீட்டாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் நம்பகத்தன்மையையும் வழங்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் மேலும் கூறினார்.
அதே நேரத்தில் கெப்பிட்டல் ஏ சுற்றுச்சூழல் அமைப்பின் வலிமை. செலவுகளைக் குறைத்து அதிக வருவாயை ஈட்டுவதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தொடர்ந்து அதன் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதில் ஏர் ஆசியா மூவ் அதன் விற்பனை. இணைப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது. ஏடிஇ தொடர்ந்து செலவுத் தளத்தை மேம்படுத்திக் குறைத்து வருகிறது. மேலும் ஏர் ஆசியா நெக்ஸ்ட் அதன் வலுவான தொழி ல்நுட்பத் திறன்களையும் விரிவான தரவுத்தளத்தையும் பயன்படுத்தி விமானப் போக்குவரத்து விற்பனையை அதிகபட்சமாக்குகிறது ஏர்ஏசியா எக்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி போ லிங்கம் கூறினார்.




