இந்த சாதனைகளுடன், நிலவை நோக்கிய பயணத்தில் நீண்ட தூரம் பயணித்தவர்கள் என்ற பெருமையையும் ஆர்டெமிஸ் 2 குழுவினர் பெற்றுள்ளனர். முன்னதாக 1970-இல் நிலவை நோக்கி பயணம் செய்த அப்பல்லோ-13 குழுவினர் பூமியில் இருந்து 4,00,171 கிலோ மீட்டர் பயணித்திருந்தனர். தற்போது நிலவை சுற்றி வரும் வீரர்கள் பூமியில் இருந்து 4,06,764 கிலோ மீட்டர் சென்றதாக நாசா அறிவித்துள்ளது. நிலவை நோக்கிய 10 நாட்கள் பயணத்தில் நாசா வீரர்கள் மொத்தமாக 11,02,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருப்பார்கள் என நாசா தெரிவித்துள்ளது. இப்படி நிலவில் எண்ணற்ற புதிய சாதனைகளை படைத்து வருகிறது ஆர்டெமிஸ் 2 குழு!


