அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த போர் நிறுத்த அறிவிப்பு, கடந்த நாற்பது நாட்களாக கச்சா எண்ணெய் சந்தைகளை ஆட்டிப்படைத்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நேற்று (ஏப்ரல் 7) கச்சா எண்ணெய் விலை, உச்சபட்ச விலையான 117.63 டாலரிலிருந்து 91.05 டாலராக, அதாவது 20% சரிந்தது. சில மணி நேரங்களிலேயே ஒரு பேரலுக்கு 26 டாலர் வரை குறைந்தது. இது, ஏப்ரல் 2020-ல் (கொரோனா காலம்) இருந்து ஏற்பட்ட மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவாகும். 20% சரிவுக்குப் பிறகு, பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) ஒரு பேரல் $94 – $95 நிலைகளிலும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் $91 – $93 வரையிலும் வர்த்தகமாகி வருகிறது.


