• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 7, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 07, 2026 8:59 PM IST

ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

News18
News18

ஈரானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறும், மின் மற்றும் ராணுவத் தளங்களை தவிர்க்குமாறும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானுக்கு முடிவு கட்டப்படும். ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும். ஈரானியர்கள் நரகத்தில் வாழ்வார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 5ஆம் தேதி ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் காலக்கெடு இன்று அமெரிக்க நேரப்படி இரவு 8 மணியோடு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஒட்டுமொத்த நாகரிகமே (ஈரான்) இன்று இரவு அழியப்போகிறது. அது ஒருபோதும் மீண்டு எழாது” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில், “ஒட்டுமொத்த நாகரிகமே (ஈரான்) இன்று இரவு அழியப்போகிறது. அது ஒருபோதும் மீண்டு எழாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால், பெரும்பாலும் இது நடக்கக்கூடும்.

ஒருவேளை அற்புதமான புரட்சி ஏதேனும் நிகழலாம். யாருக்கு தெரியும். உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்று இரவு நாம் அதனைத் தெரிந்துகொள்வோம். 47 ஆண்டுகால அச்சுறுத்தல், ஊழல் உள்ளிட்டவை ஒருவழியாக முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். மின் தளங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களைத் தவிர்த்து, வீட்டிற்குள் இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணங்களை மேற்கொள்வோர் கண்டிப்பாக தூதரகத்துடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்

Read More

Previous Post

இந்தியா வந்த ஜப்பான் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! அதிரவைக்கும் ராஜஸ்தான் சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காதலியின் இளம் வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமையல்காரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – Malaysiakini

Next Post

காதலியின் இளம் வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமையல்காரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin