இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக, தங்கம் விலை விண்ணைத் தொடும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. இந்த நிலையில், தற்போது தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.


