ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்த வெளிநாட்டுக் கடன்கள், கடன் நீட்டிப்புகள் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையே பெரிதும் நம்பியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், சீனா, சவூதி அரேபியா போன்ற நட்பு நாடுகளிடமிருந்து கிடைத்த நிதி உதவியானது, இஸ்லாமாபாத் தன்னை தற்காலிகமாக நிலைநிறுத்திக் கொண்டது. இதுபோன்ற நிலையில் கடனை நீண்டகாலத்துக்கு நீட்டிக்க அபுதாபி மறுத்துள்ளது, அந்நாட்டுக்கு பெரும் சுமையாகி உள்ளது.


