ரெ. மாலினி
மலாக்கா, ஏப்ரல் 6 :
திறந்த வெளி பல்கலைக்கழக மலேசியா (OUM) மலாக்கா கற்றல் மையத்தின் வணிக நிர்வாகத்தில் (பன்னாட்டு வணிகம்) பட்டதாரி மாணவரான தீபன் ராஜ் சேகர், ஜப்பானில் நடைபெற்ற உலக மாணவர் தலைமை உச்ச மாநாட்டில் (Global Student Leadership Summit – GSLS) இணையம் வாயிலாகக் கலந்துக் கொண்டு சாதனைப் புரிந்துள்ளார்.
ஜனவரி 9 முதல் 11, 2026 வரை ஜப்பானின் இபராக்கி மாநிலத்திலுள்ள த்சுகூபா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தீபன்ராஜ் நிகழ்நிலை முறையில் (Online) பங்கேற்று “இளைஞர் தலைமைத்துவத்தை தொழில்முயற்சி மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சிறப்பாகக் கருத்துரையை வழங்கினார்.


மலேசிய உயர்கல்வி அமைச்சு (MoHE), த்சுகூபா பல்கலைக்கழகம் (ஜப்பான்) மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டின் மையக் கருப்பொருள்: “எதிர்கால உலகத் தலைவர்களை வளர்த்தல்” (Nurturing Future Global Leaders).
இந்த உச்சி மாநாடு உலகெங்கிலுமிருந்த மாணவர்கள், இளைஞர் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்தது. முக்கியச் சொற்பொழிவுகள், குழு விவாதங்கள், இணையவழிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேசத் தலைமைக் கூட்டுப் பணிகள் எனப் பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.தனிநபர் பங்கேற்பாளராக இவர் மலாக்கா மாநில OUM பல்கலைக்கழகத்தையும் , இந்திய சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்திய ஒரே ஒரு இந்தியராக தீபன்ராஜ் திகழ்கிறார்.
தொழில் முயற்சியும் சமூக ஈடுபாடும் இளைஞர்களின் தலைமைத்துவத் திறனை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை அவரது ஆய்வுக் கருத்துரை தீபன் ராஜ் சேகரின் இச்சாதனை, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணைய வசதியைப் பயன்படுத்தி உலக அரங்கில் மலேசிய மாணவர்கள் எவ்வாறு தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது பிற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கமும், உந்துதலுமாக அமையும்.எடுத்துரைத்தது. இது கல்வி, சமூகம் மற்றும் தொழில் சூழல்களில் நடைமுறைப் பயன்பாடுகளைக் கொண்டதாக இருந்தது.




