இப்படியாக எலிகள் எண்ணிக்கையை குறைக்க, மூன்று வழிகளை முன்னெடுத்துள்ளனர். அதன்படி முதலில் எலிகளைக் கொல்ல விஷம் வைப்பது, இரண்டாவது எலிகள் நடமாடும் இடங்களில் பவுடர் தூவுவது, இறுதியாக எஞ்சியிருக்கும் எலிகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க கருத்தடை திரவத்தை அவற்றின் உணவாக வைப்பது என முப்பரிமாண முறையில் செயல்பட திட்டமிட்டுள்ளனர். இதில் எலிகளை கொல்வதை விட, கருத்தடை மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாஷிங்டன் டி.சி. அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் விஷங்களை விட கருத்தடை முறை மற்ற விலங்குகளுக்கு (உதாரணமாக எலிகளைப் பிடிக்கும் பருந்துகள் அல்லது வீட்டு செல்லப்பிராணிகள்) குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


