வத்தளைப் பகுதியில் மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06) வத்தளை, மாபோல – தூவவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் 03 தீயணைப்பு வாகனங்களும் 13 தீயணைப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
இந்த நிலையில், தற்போது தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

