ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், “ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
முன்பதிவு செய்யப்பட்டுள்ளது
அதன்படி, 30,000 மெட்ரிக்தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

