கோலாலம்பூர் | ஏப்ரல் 5, 2026:
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கோத்தா ஸ்டார் பகுதியில் கடுமையான வெப்ப அலை (Level 2 Heatwave) நிலவி வருவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. இது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இங்கு நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெடா தவிர்த்து நாட்டின் பிற மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது: அவற்றில் கெடா: கோலா மூடா, குபாங் பாசு, போக்கோக் சேனா, பெண்டாங், பாடாங் தெராப், சிக் மற்றும் பாலிங், பெர்லிஸ்: மாநிலம் முழுவதும், பேராக்: உலு பேராக் மற்றும் கோலா கங்சார், கிளாந்தான்: கோலா கிராய், பாசிர் மாஸ், தானா மேரா மற்றும் மாச்சாங் ,பகாங்: மாரான் மற்றும் ஜெராண்டுட் மற்றும் ஜோகூர்: சிகாமாட் ஆகிய இடங்களும் அடங்கும்.
இந்தக் கடுமையான வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்துமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் மற்றும் வெளிப்புறப் பணியாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




