உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்த இரு கிழமைகளில்( 2019.04. 29 திங்கட்கிழமை) தென்னிலங்கையின் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சஹ்ரான் குழு தொடர்பில் கேள்வி எழுப்பிய பெண் ஊடகவியலாளருக்கு நாட்டை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டதாக இடதுசாரிகள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திடீரென ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர்,
ஏழு வருடங்கள்
குண்டுத் தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு வருடங்கள் கடந்து விட்ட சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படாத நிலையில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன.

தாக்குதல் நடந்து மரணித்தவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு அதன் சூடு தணிவதற்குள் நடந்த குறித்த அரசியல் கலந்துரையாடலில் பேசிக் கொண்டிருந்த கோட்டாபயவிடம் சஹ்ரான் குழுவினருக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதாக பேசப்படுகிறதே அது உண்மையா? என்று கோட்டாபயவிடம் கேட்க திடீரென மாறியமுகத்துடன் தடித்த குரலில் ஆம் என்று பதிலளித்துள்ளார்.
அவர்களிடமிருந்து தகவல்களை அதாவது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே அப்படி செய்தோம் என தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரின் கோபம் உச்சம் தொட்ட நிலையில் இவ்வாறான கலந்துரையாடல்களில் இப்படியான கேள்விகள் கேட்க வேண்டாம் என ஏசிக் கொண்டே போக குறித்த பெண் ஊடகவியலாளர் தட்டுத்தமாறு பேச்சை மாற்றி கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் நாட்டிலே இருக்கவில்லை. அத்தோடு அந்த தொலைக்காட்சி கோட்டாபய உட்பட ராஜபக்சக்களுக்கு சார்பாக செயற்பட்ட நிறுவனமாகும்.
அவ்வாறிருந்தும் ஊடகவியலாளர் அவுஸ்திரேலியா சென்று விட்டார். அண்மையில் இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் அவர் தொடர்பிலே பேசப்படுகிறது என குப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

