CNN – நியூஸ்18 க்கு கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்திய போது, தான் (ஆசிம் முனீர்) அபுதாபி பயணம் மேற்கொண்ட போது ஐக்கிய அரபு அமீரகத் தலைமை தன்னிடம் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். “உங்கள் பிரதமரும் நீங்களும் (முனீர்), ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலமுறை சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளீர்கள். ஆனால், அதே ஆதரவு எமிரேட்ஸுக்குக் காட்டப்படவில்லை” என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

