இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அண்மையில் நடந்த ஈஸ்டர் விழாவில் பங்கேற்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில், “குருத்தோலை ஞாயிறன்று இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் அவரை ராஜாவாகக் கொண்டாடினர். தற்போது என்னையும் மக்கள் ராஜாவாக கொண்டாடுகின்றனர்.
நான் ராஜா என்றால் இன்னும் நிறைய செய்ய முடியும்
எங்கு சென்றாலும் அன்போடு ராஜா என, அழைக்கின்றனர். நான் ராஜா என்றால் இன்னும் நிறைய செய்ய முடியும்,” என, சிரித்தபடி பேசினார்.

இந்த கருத்தை ஆதரிப்பது போல வெள்ளை மாளிகையின் ஆன்மிக ஆலோசகரும், மத போதகருமான பவுலா வைட் கெய்னும் பேசினார்.
அவர் கூறுகையில்,
இயேசுவைப்போல் செயற்படும் ட்ரம்ப்
“இயேசு தன் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் எண்ணற்ற பாடங்களைக் கற்பித்தார். அதே போல ஜனாதிபதி ட்ரம்பும் செயல்படுகிறார்,” என்றார்.

சமீபத்தில், அமெரிக்காவில், ‘நோ கிங்ஸ்’ என்ற தலைப்பில் போராட்டங்கள் நடந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பான காணொளி வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது.
எனினும் சமூக ஊடகங்களில் இந்த காணொளி வேகமாக பரவி வருகிறது.
டிரம்பின் இந்த பேச்சு கிறிஸ்தவ சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை கடவுள் அவமதிப்பு செயல் என, கண்டனம் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

