Last Updated:
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை 8 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை 8 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. மற்ற எந்த நாடுகளுக்கும் இப்படியான ஒரு அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு முழுவதுமாக மூடியிருக்கிறது.
இதனால், உலகளாவிய எண்ணெய் சந்தைகள் நிலைகுலைந்துள்ளன. மேலும் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக இதுவரை குறைந்தது எட்டு இந்தியக் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. ஹார்முஸ் ஜல சந்தி என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5-ல் ஒரு பங்கை கொண்டுள்ள முக்கியமான கடல் வழித்தடம்.
போர் காரணமாக ஈரான் இந்த முக்கியமான கடல் வழித்தடத்தை மூடியுள்ளது. இருந்தாலும், ,இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட “நட்பு நாடுகளுக்கு” அந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஈரான் கூறிவருகிறது. அந்த வகையில் இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடந்து வருகின்றன. இன்று ‘கிரீன் சான்வி’ எனப்படும் எல்பிஜி டேங்கர் கப்பல் ஹாமுஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
இதன் மூலம், இந்த முக்கியப் பாதையைக் கடந்து செல்லும் எட்டாவது கப்பல் இதுவாகும்.
ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்திய கப்பல்கள்… எந்த நாட்டுக்கும் கிடைக்காத அனுமதி!


