இந்த இடத்தில், Stone Age என்ற டிரம்ப்பின் வார்த்தை வெறும் ஆவேசமான வார்த்தைகள் மட்டுமல்ல; அதற்கு பின்னால் ஒரு மிகத்தெளிவான ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான அச்சுறுத்தல் ஒளிந்திருக்கிறது. ஒரு நாடு நவீன காலத்தில் இயங்குவதற்கு மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் வங்கிச் சேவைகள் மிக அவசியம். டிரம்ப் குறிப்பிடுவது, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்புகளை அழிப்பது. அணைக்கட்டுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் செயலிழக்கச் செய்வது. இதையெல்லாம் செய்து, மின்சாரம் மற்றும் நீர் வசதி இல்லாத ஒரு நாடு, நவீன வசதிகள் ஏதுமற்ற நிலைக்கு ஈரான் தள்ளப்படும் என்பதையே டிரம்ப் Stone age என குறிப்பிடுகிறார். எனவே அடுத்தடுத்து உலகளவில் என்ன நடக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.


