• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை கற்காலத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த டிரம்ப்? இனி நடக்கப்போவதென்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை கற்காலத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த டிரம்ப்? இனி நடக்கப்போவதென்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான Operation Epic Fury-யில் “தீர்மானமான மற்றும் மிகப்பெரிய வெற்றிகளை” பெற்றுள்ளதாக டிரம்ப் பேசியுள்ளார். மேலும், “ஈரான் மீதான தாக்குதலில் நான் நிர்ணயித்த முக்கிய இலக்குகள் முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இன்னும் 2 முதல் 3 வாரங்களில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும்” என பேசியுள்ளார் டிரம்ப். “2 முதல் 3 வாரங்களில் போர் முடியும்” என்று டிரம்ப் காலக்கெடு விதிப்பது, அமெரிக்க மக்களுக்கு அவர் தரும் வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது. “முடிவில்லாத போர்களில் அமெரிக்கா சிக்காது” என்ற தனது பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள, போரை விரைவாக முடித்துவிட்டு “வெற்றியாளர்” என்ற பட்டத்துடன் வெளியேற அவர் பயன்படுத்தும் உத்தி என கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Stone Age – ட்ரம்ப் சொல்ல வருவது என்ன?

இந்த இடத்தில், “ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம், அவர்களை கற்காலத்திற்கே கொண்டு செல்வோம்” என்று மீண்டும் எச்சரித்துள்ளார் டிரம்ப். Stone Age என்ற டிரம்ப்பின் வார்த்தை வெறும் ஆவேசமான வார்த்தைகள் மட்டுமல்ல; அதற்கு பின்னால் ஒரு மிகத்தெளிவான ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான அச்சுறுத்தல் ஒளிந்திருக்கிறது. ஒரு நாடு நவீன காலத்தில் இயங்குவதற்கு மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் வங்கிச் சேவைகள் மிக அவசியம். டிரம்ப் குறிப்பிடுவது, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்புகளை அழிப்பது. அணைக்கட்டுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் செயலிழக்கச் செய்வது. இதையெல்லாம் செய்து, மின்சாரம் மற்றும் நீர் வசதி இல்லாத ஒரு நாடு, நவீன வசதிகள் ஏதுமற்ற நிலைக்கு ஈரான் தள்ளப்படும் என்பதையே டிரம்ப் Stone age என குறிப்பிடுகிறார்.

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா – இஸ்ரேல்

இன்றையப் பொருளாதாரம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நம்பியே உள்ளது. “Stone Age” என்பது ஈரானின் ஒட்டுமொத்த சைபர் கட்டமைப்பு மற்றும் செயற்கைக்கோள் தொடர்புகளை முடக்குவதைக் குறிக்கிறது. இதனால் அந்நாட்டின் உள்ளே பணப் பரிமாற்றம் முதல் ராணுவக் கட்டளைகள் வரை அனைத்தும் முடங்கி, பழைய காலத்து தகவல் தொடர்பு முறைக்கு அவர்கள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத்தான் டிரம்பும் விரும்புகிறார்.

இதையும் படிங்க: Iran Israel War | அன்று இந்தியாவை ‘வெளியேற’ சொன்ன நாடுகளுக்கு, இன்று இப்படியொரு நிலையா?

ஈரானின் முதுகெலும்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழிப்பதன் மூலம், அந்நாட்டின் வருமானத்தை முற்றிலுமாகத் துண்டிக்க துடிக்கிறார் டிரம்ப். ஏற்றுமதி செய்யவோ, உள்நாட்டுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவோ எரிபொருள் இல்லாத நிலை உருவானால், அந்த தேசத்தின் இயக்கம் பல தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்றுவிடும். வரலாற்று ரீதியாக, வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்கத் தலைவர்கள் இந்த “Stone Age” என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது எதிரி நாட்டுக்குத் தரும் கடைசி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. “நீங்கள் நிபந்தனையின்றி சரணடையவில்லை எனில், உங்கள் நாட்டை ஒரு நவீன தேசமாகவே இருக்க விடமாட்டோம்” என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.

Stone Age எங்கிருந்து வந்த வார்த்தை?

Stone Age என்ற சொல்லாடலை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தியவர்களில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை ஜெனரல் கர்டிஸ் லெமே (Curtis LeMay). 1965-ல் வியட்நாம் போரின் போது, வடக்கு வியட்நாம் மீது குண்டுவீசி அவர்களை “மீண்டும் கற்காலத்திற்கே விரட்டுவோம்” என்று அப்போது அவர் கூறியது பெரும் சர்ச்சையானது.

அமெரிக்காவை மாற்று எரிசக்தி மையமாக மாற்ற முயலும் டிரம்ப்… எதற்காக தெரியுமா?

அதிபர் டிரம்ப் தனது உரையில் கோடிட்டு காட்டிய மற்றொரு முக்கிய விவகாரம் ஹார்முஸ் நீரிணை. உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கு “ஈரானிய ஆட்சியின் பைத்தியக்காரத்தனமான செயல்களே” காரணம் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் இந்த வழித்தடத்தை மூடியதால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிப் பேசிய அவர், “அமெரிக்கா இப்போது உலகின் நம்பர் ஒன் எண்ணெய் உற்பத்தியாளர். எங்களுக்கு ஈரானிய எண்ணெய் தேவையில்லை” என்றார்.

மற்ற நாடுகள் தைரியமாக முன்வந்து ஹார்முஸ் வழித்தடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அமெரிக்காவிடம் அதிகப்படியான எண்ணெய் உள்ளதால் உலக நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என்றும் கூறுகிறார். இதன் மூலம் ஈரானால் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும், அமெரிக்கா ஒரு “மாற்று எரிசக்தி மையமாக” உருவெடுத்துள்ளது என்பதை உலகச் சந்தைக்கு உணர்த்துகிறார். இது அமெரிக்க டாலரின் வலிமையை நிலைநிறுத்த அவர் செய்யும் முயற்சி.

இது மட்டுமல்லாமல், டிரம்பின் இந்த அறிவிப்பு வெறும் வணிகம் சார்ந்தது மட்டுமல்ல, ஒரு ஆழமான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தந்திரமாகும். டிரம்பின் லாஜிக், ‘உங்களுக்கு எண்ணெய் கிடைக்கவில்லையா? அமெரிக்காவிடம் வாங்குங்கள்’ என்பதுதான். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஆதிக்கத்தை உடைத்து, அமெரிக்காவை உலகின் ஒற்றை எரிசக்தி மையமாக மாற்ற அவர் திட்டமிடுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, பிரான்சில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரான் மீதான போர் வரும் வாரங்களில் முடிவுக்கு வரும் என்றார். இந்நிலையில், மார்ஷல் தீவுகள் கொடியுடன் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கி அழித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்கா மீண்டும் உலகின் Hottest பொருளாதாரமாக மாறியுள்ளதாக டிரம்ப் குறிப்பிடுகிறார். முடங்கிக் கிடந்த நாட்டைத் தான் கடந்த ஓராண்டில் மீட்டெடுத்துள்ளதாக கூறியுள்ளார் டிரம்ப். இதற்கு அவர் முக்கியமாக கூறுவது “Drill, Baby, Drill” & Tariff கொள்கை. இந்தக் கொள்கை மூலம் அமெரிக்காவிலேயே அதிகப்படியான எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்து, அதன் மூலம் உலக நாடுகளைத் தன் பக்கம் இழுப்பதே அவர் எண்ணம். Tariff கொள்கை மூலம், பிற நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது அதிக வரி விதித்து, அமெரிக்க உற்பத்தித் துறையை மீண்டும் வலுப்படுத்துவது.

ஈரானியத் தலைவர்களின் உயிரிழப்புகளால் அங்கு ஏற்கனவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாகக் குறிப்பிடும் டிரம்ப், “புதிய ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லையெனில் தாக்குதல் தொடரும்” என எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பங்குச் சந்தைகளில் ஒரு Flash Crash-யை ஏற்படுத்தியது.

முதலீட்டாளர்கள் வேதனை!

போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பியிருந்த முதலீட்டாளர்கள் டிரம்பின் பேச்சால் ஏமாற்றமடைந்தனர். இந்தியப் பங்குச்சந்தைகளான Sensex மற்றும் Nifty சுமார் 2% வரை சரிந்தன. ஒரு மணி நேரத்தில் மூதலீட்டாளர்கள் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். பிற ஆசிய நாடுகளின் சந்தைகளும் , ஐரோப்பா முழுவதிலும் உள்ள சந்தைகளும் மின்னல் வேகத்தில் சரிந்தன. அமெரிக்காவில் 24 மணிநேரமும் செயல்படும் “ஃபியூச்சர்ஸ்” (Futures) சந்தையில் பங்குகளை விற்க முதலீட்டாளர்கள் முண்டியடித்தனர்.

பதிலில்லா கேள்விகள்…

டிரம்பின் 20 நிமிட உரையில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக ஈரானுடனான இந்த போர் எப்போது முடியும்? அமெரிக்காவின் வெளியேறும் திட்டம் என்ன? ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஈரானில் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பற்றியும் டிரம்ப் தனது உரையில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஒரு பக்கம் ஈரானை எச்சரிக்கிறார், மறுபக்கம் மற்ற நாடுகளை “நீங்களே போய் பார்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார். அவரிடம் ஒரு நிலையான கொள்கை இல்லை என்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை அதிரடியாக மூடிய ஈரான், அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்க உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அப்படி திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி

தொடரும் போர்… ஈரானின் பதில் என்ன?

டிரம்ப் தனது உரையில், ஈரானின் ஏவுகணைத் திறன் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களிடம் மிகக் குறைவான ஏவுகணை ஏவுதளங்களே மிஞ்சியுள்ளன என்றும் கூறினார். ஆனால், அவர் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே ஈரான் மூன்று கட்டங்களாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைஃபாவைத் (Haifa) தாக்கியதாக ஈரான் அரசு அறிவித்தது. டெல் அவிவ் அருகே உள்ள பிணே பராக் (Bnei Brak) பகுதியில் விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் 11 வயது சிறுமி உட்பட 14 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலியர்கள் தங்களின் புனிதமான ‘பாஸோவர்’ (Passover) திருவிழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

டிரம்பின் “Stone Age” மிரட்டலுக்கு ஈரானியத் தலைமை மிகக் காட்டமாகப் பதிலளித்தது. அதில், “ஈரான் 3,000 ஆண்டு பழமையான நாகரிகம். சில நூறு ஆண்டுகள் சரித்திரம் கொண்ட ஒரு நாடு எங்களை கற்காலத்திற்குத் தள்ளுவோம் என்று பேசுவது வேடிக்கையானது” என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய்

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei), “ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் சர்வதேசச் சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கும் எதிரானது, காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு. தற்காப்பு என்பது ஈரானின் உரிமை. அச்சுறுத்தல்கள் மற்றும் காலக்கெடு மூலம் ஈரானிய மக்களிடம் யாரும் பேச முடியாது. ஹார்முஸ் நீரிணை குறித்த விவகாரத்தில் டிரம்பின் வார்த்தை மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. டிரம்ப் கூறுவது போல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் வலியுறுத்தவே இல்லை. அமெரிக்கா நிரந்தர அவமானத்தைச் சந்திக்கும் வரை போர் தொடரும்” என கூறியுள்ளார்.

நிச்சயமற்ற நிலையில் உலக அரசியல்!

அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆக்ரோஷமான உரையும், அதற்கு ஈரான் அளித்த உடனடி ஏவுகணைப் பதிலடியும் 2026-ஆம் ஆண்டின் உலக அரசியலை ஒரு மிகப்பெரிய நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளன. போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அது, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அரித்துக்கொண்டே இருக்கும்.

டிரம்பின் “Stone Age” மிரட்டல் ஈரானை நிலைகுலையச் செய்யக்கூடும், ஆனால் அதன் விளைவாக ஏற்படும் உலகளாவிய Recession அமெரிக்காவையும் பாதிக்கும். “கற்காலத்திற்கு” தள்ளப்படும் நாடு எதுவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் தாக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதே கசப்பான உண்மை.

தற்போதைய சூழலில், ராணுவ வலிமையை விட Calculated Diplomacy-யே உலகை ஒரு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். ஈரான் போரை டிரம்ப் தனது “முதலீடு” என்று கூறுவதை விட்டு விட்டு, நடைமுறைச் சாத்தியமான ஒரு வெளியேறும் திட்டத்தை வகுப்பதே அறிவுப்பூர்வமான செயலாக இருக்கும்.

Read More

Previous Post

CSK ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. ஐபிஎல் டிக்கெட் இருந்தால் மெட்ரோ, பஸ்ஸில் கட்டணமில்லா பயணம்!

Next Post

பல அரசு ஊழியர்கள் இன்னும் ‘மடானி’ கொள்கையை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. – Malaysiakini

Next Post

பல அரசு ஊழியர்கள் இன்னும் ‘மடானி’ கொள்கையை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin