பிள்ளைகளை வெப்ப பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப் பெற்றோர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பிள்ளைகளிடையே சரும நோய்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கப் பெற்றோர் பின்வரும் எளிய மற்றும் பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகளவு தண்ணீர்
இதற்கமைய பிள்ளைகளைத் தினமும் குறைந்தது 2 முறையாவது குளிக்கச் செய்ய வேண்டும்.
மென்மையான மற்றும் இலகுவான ஆடைகளை அணியச் செய்ய வேண்டும்.

இயற்கை பானங்களை அதிகமாக உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
பிள்ளைகள் அதிகளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு இரண்டு போத்தல்கள் தண்ணீர் கொடுத்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுவர்கள் தண்ணீர் குடிக்காமல் வீதிகளில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவர்களின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

