• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இமயமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி.. வெளிச்சத்துக்கு வந்த மோசடி.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இமயமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி.. வெளிச்சத்துக்கு வந்த மோசடி.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 2:57 PM IST

நேபாள இமயமலை டிரக்கிங் சுற்றுலாவில் வழிகாட்டிகள், தனியார் மருத்துவமனைகள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளை விஷமருந்து கொடுத்து 160 கோடி ரூபாய் காப்பீட்டு மோசடி செய்தது வெளிச்சம்.

கோப்பு படம்
கோப்பு படம்

நேபாளத்தில் இமயமலைக்கு மலையேற்றத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவமனைகள், ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

எவரெஸ்ட், அன்னபூர்னா, லாங்டாங் மற்றும் மனசுலு பகுதிகளுக்கு டிரக்கிங் வரும் சுற்றுலா பயணிகள் தங்களை வழிநடத்த சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் வழிகாட்டிகளை நியமிக்கின்றனர். இந்த வழிகாட்டிகள் சுற்றுலா பயணிகள் குடிக்கும் தேநீர் அல்லது குளிர்பானங்களில் பேக்கிங் சோடாவை கலந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலையேறும் போது சுற்றுலா பயணிகளுக்கு கடும் வயிற்று வலி, நீரிழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஒரே ஹெலிகாப்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டு போலி மருத்துவ ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்களை தயாரித்து காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 160 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு சுற்றுலா பயணி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் சுற்றுலா நிறுவனங்கள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் கூட்டாக இணைந்து 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளிடம் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இமயமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி.. வெளிச்சத்துக்கு வந்த மோசடி.. என்ன நடந்தது?

Read More

Previous Post

அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. க்கும் அதிகமான தொலைவில் வசிக்கும் அரசுப் பணியாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதி. – Malaysiakini

Next Post

DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்… சரிந்த Global Market…

Next Post
DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்… சரிந்த Global Market…

DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்... சரிந்த Global Market...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin