‘ஆர்ட்டெமிஸ் 2’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச், மற்றும் கனடா விண்வெளி வீரரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் 10 நாட்கள் பயணமாக நிலவை சுற்றிவரவுள்ளனர். பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு, ஓரியன் விண்கலம் அவர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும்.


