• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

RMV வாகனப் பதிவு மோசடி: ஆணையாளர் நாயகத்தின் உறவினரும் சி.ஐ.டியால் கைது

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
RMV வாகனப் பதிவு மோசடி: ஆணையாளர் நாயகத்தின் உறவினரும் சி.ஐ.டியால் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (RMV) ஆணையாளர் நாயகம் கைதைத் தொடர்ந்து அதே வாகனப் பதிவு மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாவதகம, மாரலந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒரு தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறை

இவர் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் சகோதரியின் மகன் (மருமகன்) எனத் தெரிவிக்கப்படுகிறது.

28 – 8583 இலக்கமுடைய கெப் (Cab) ரக வாகனத்தின் பாகங்களைச் சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைத்து அதன் செசி (Chassis) இலக்கத்தை மாற்றுவதற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 27-8454 இலக்கமுடைய பாரவூர்தி ஒன்றின் பாகங்களை முறைகேடாகப் பயன்படுத்திப் பதிவு செய்தமைக்கும் இவர் உதவி புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி கமல் சுதந்த அமரசிங்க, கொழும்பு 07 இல் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

ஊழல் தடுப்பு

அவர் தற்போது எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பாரிய மோசடி குறித்த விசாரணைகளை பாணந்துறை வாலன மத்திய ஊழல் தடுப்புப் படையினர் ஆரம்பித்திருந்தனர்.

இந்தநிலையில், தற்போது காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் இவ்விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே இந்தத் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நிதி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மத்திய அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் – பிரதமர் – Malaysiakini

Next Post

எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது! தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை RM6.00-ஐத் தாண்டியது  | Makkal Osai

Next Post
எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது! தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை RM6.00-ஐத் தாண்டியது  | Makkal Osai

எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது! தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை RM6.00-ஐத் தாண்டியது  | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin