• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு.. அதிரடியாக தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு.. அதிரடியாக தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 01, 2026 5:38 PM IST

நிர்மலா சீதாராமன் மீது லிபிகா மித்ரா தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கை, போதிய ஆதாரம் இல்லை என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதுடெல்லி தொகுதியில் சோம்நாத் பாரதி போட்டியிட்டார்.

இந்நிலையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பழைய குடும்பப் பிணக்குகள் குறித்து நிர்மலா சீதாராமன் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஆனால், தங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் 2019-லேயே சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.

தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக நிர்மலா சீதாராமன் பழைய கசப்பான சம்பவங்களை மீண்டும் கிளறியுள்ளார். பாரதியின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன எனக் கூறி சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா அவதூறு வழக்கை நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பராஸ் தலால், வழக்கைத் தொடர போதிய ஆதாரங்களோ முகாந்திரமோ இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.”இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையான சட்டப்பூர்வ காரணங்கள் ஏதுமில்லை.” என்றும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

ஈரானின் ட்ரோன் தாக்குதல்; பிரித்தானியாவில் பற்றி எரியும் தீ

Next Post

ரூபாய் சரிவை RBI ஏன் தடுக்க முடியவில்லை? முன்னாள் வங்கியாளர் விளக்கம்|Rupee Crash: Why RBI Has Failed to Stop It

Next Post
ரூபாய் சரிவை RBI ஏன் தடுக்க முடியவில்லை? முன்னாள் வங்கியாளர் விளக்கம்|Rupee Crash: Why RBI Has Failed to Stop It

ரூபாய் சரிவை RBI ஏன் தடுக்க முடியவில்லை? முன்னாள் வங்கியாளர் விளக்கம்|Rupee Crash: Why RBI Has Failed to Stop It

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin