• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



விண்வெளி என்பது புதிர் போன்றது. இதற்கான விடைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து வருகிறோம். இந்த முயற்சியில், விண்வெளி வீரர்கள் ஏராளமான ஆபத்துகளை சந்தித்திருக்கின்றன. அப்படித்தான் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் ஃபிங்கே, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதாவது அவர், தனது பேச்சு திறனை இழந்திருக்கிறார்.



இது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதியதாக விண்வெளிக்கு செல்லும் இஸ்ரோ வீரர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


என்ன நடந்தது?


ஒரு வாரத்திற்கு முன்னர், அசோசியேட்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு மைக்கேல் ஃபிங்கே அளித்த பேட்டியில், தான் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்து பேசியிருக்கிறார். விண்வெளி வீரர்கள் தங்கள் அனுபவங்களை, ஆய்வுகளுக்காக பகிர்ந்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில், மைக்கேல் ஃபிங்கே சொன்ன தகவல் மொத்த விஞ்ஞானிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இதற்கு முன்னர் 3 முறை விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். இந்த பயணத்தின்போதுதான் அவர் தனது பேசும் திறனை இழந்திருக்கிறார்.


எப்படி நடந்தது?


ஜனவரி 7ஆம் தேதியன்று, இரவு அந்த சம்பவம் நடந்தது. அடுத்த நாள் அவர் விண்வெளியில் நடக்க பயிற்சி பெற்றிருந்தார். பயிற்சியை முடித்துவிட்டு அவர் சக நண்பர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், திடீரென மைக்கேல் ஃபிங்கேவின் பேசும் திறன் நின்றுப்போனது. சுமார் 20 நிமிடங்கள் வரை அவரால் பேச முடியவில்லை. எந்த வலியும், மற்ற அறிகுறிகள் ஏதும் இல்லாமல் அவரால் பேச முடியாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


இதை பார்த்த மற்ற விண்வெளி வீரர்கள், உடனடியாக பூமியில் உள்ள மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரியசானது. பூமியிலிருந்து மருத்துவக்குழு கொடுத்த வழிக்காட்டுதல்களை மைக்கேல் ஃபிங்கே பின்பற்றிய பின்னர், பேச்சு திறன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.


காரணங்கள் என்ன?


இது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். பேச்சு என்பது, நுரையீரல் காற்று, குரல் நாண்களின் அதிர்வு, நாக்கு மற்றும் உதடுகளின் செயல்பாடுகளால் சாத்தியமாகிறது. இதைவிட முக்கியம், பேசும்போது என்ன பேச வேண்டும் என்பது குறித்து மூளை நமக்கு சிக்னல்களை கொடுக்கும். விண்வெளி பயணத்தின்போது இந்த சிக்னல் பாதிக்கப்படுகிறது. இதுவே பேச்சு தற்காலிகமாக தடைப்பட காரணம்.


அதேபோல, பூமியில் இருக்கும்போது, புவி ஈர்ப்பு விசை காரணமாக உடலில் உள்ள ரத்தம், தண்ணீர் சமமாக பரவி இருக்கும். ஆனால், விண்வெளியில் கிராவிட்டி கிடையாது. எனவே, மொத்த திரவமும் மண்டைக்கு ஏறிவிடும். இதனால் விண்வெளி வீரர்கள் பேசும்போது மூக்கின் வழியாக பேசுவதை போன்று இருக்கும். இதெல்லாம் காரணம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.


இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிக்கலா?


இந்தியா, ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ரெடியாகி வருகிறது. சொந்தமாக நாம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல்முறை. எனவே, இந்த பயணத்தில் மைக்கேல் ஃபிங்கேவுக்கு ஏற்பட்டதை போல, நம்முடைய விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இஸ்ரோ மருத்துவக்குழு எல்லாவற்றிற்கும் ரெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தங்கம் வென்ற சரவணன்! – Malaysiakini

Next Post

மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin