மத்திய கிழக்கு போரில் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த கோரிக்கை அம்சங்கள் தொடர் மோதலையே தூண்டிவருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக ஈரான், மத்தியகிழக்கு முழுவதுமான போர் அற்ற அமைதி வேண்டும் என்ற கோரிக்கையையும்(அமெரிக்கா வெளியேற வேண்டும்), அமெரிக்கா, தெஹ்ரான் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வரும் பின்னணியில் முடிவுக்கான சாத்தியபாடுகள் தொலை தூரத்திலேயே காணப்படுகிறன்றன.
இந்நிலையில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர தனது நாட்டிற்கு தேவையான விருப்பம் இருந்தாலும், ஆக்கிரமிப்பு மீண்டும் நிகழாமல் தடுக்க உத்தரவாதங்கள் தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் நேற்று(31.03.2026) தொலைபேசியில் உரையாடிய ஈரான் ஜனாதிபதியால் குறித்த நிபந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த கோரிக்கை அம்சங்கள் வேறுப்பாட்டுடையவையாக காணப்படுகின்றன.
குறிப்பாக நேற்று அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஒரு ஒப்பந்தத்தை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
எனினும் ஈரான் தரப்போ குண்டுகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மத்தியகிழக்கின் தற்போதைய மோதலில் பெரும் அச்சப்பிரதேசமாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணை ஓமன் மற்றும் ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் அமைந்துள்ளது என்பதே உண்மை.
சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல்
எனவே அதனை மூலோபாய ரீதியாக பயன்படுத்துவது இயல்பானது என்று ஈரான் தரப்பு கூறியிருந்தாலும் சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல்கள் பெரும் கவலைகளை தூண்டியுள்ளன.

பாதுகாப்புக் கவலைகள், அதிக காப்பீட்டுக் கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் இந்த நீர்வழியைப் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளன.
எனினும் போருக்குப் பிறகு நீர்வழியின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை ஓமானும் ஈரானும்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஹேர்மூஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்க தரைப்படை களமிறக்கப்பட்ட பின்னணியில் ஈரான் அதற்கான எதிர்ப்புக்கு தாராக இருப்பதாக கூறியுள்ளது.
குறிப்பாக “நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று கூறிய ஈரான் தரப்பு
“அவர்கள் அப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிவார்கள் என்று நாம்
நினைக்கவில்லை எனவும் சாடியுள்ளனர்.
மேலும் ஈரான் தாப்பானது, “தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு தரைப்போர் முறையில், எங்களால் அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.
எந்த விதமான தரைவழித் தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.
அவர்கள் அப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்,” என்றும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

