• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் லெஜெண்ட் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்க தேர்தலில் பரப்புரை மேற்கொள்கிறார்.. | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் லெஜெண்ட் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்க தேர்தலில் பரப்புரை மேற்கொள்கிறார்.. | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 31, 2026 3:06 PM IST

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது

News18
News18

டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் சுகந்தா மஜும்தார் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இணைப்பு விழாவில் பேசிய லியாண்டர் பயஸ் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோருக்குத் தனக்கு தேசப்பணி செய்ய வாய்ப்பளித்தற்காக அவர் நன்றி தெரிவித்தார். தனது அரசியல் பயணத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் விளையாடத் தொடங்கிய 1986 காலகட்டத்தில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றும், தற்போது உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தாலும் மேற்கு வங்கத்தில் விளையாட்டுத் துறை இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரை வரவேற்ற பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், லியாண்டர் பயஸின் வருகை வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு பெரும் பலத்தைத் தரும் என்றும், அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஒரு ஆளுமை கட்சியில் இணைந்தது பாஜகவுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் கூறினார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, டென்னிஸில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2021-ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பயஸ், அங்குப் பெரிய அளவில் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. குறிப்பாக கோவா மாநிலக் குழுவில் அவர் சேர்க்கப்படாதது போன்ற நிகழ்வுகள் அவர் திரிணாமுல் காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்டதை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: Vaibhav Suryavanshi | ரூ.10 கோடி ஒதுக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்… ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த வைபவ்!

மார்ச் 24 அன்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததில் இருந்தே அவர் பாஜகவில் இணையப்போவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. தற்போது அவர் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், மே 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

Read More

Previous Post

மாணவனைத் தாக்கிய மூன்று மாணவர்கள் நீதிமன்றின் உத்தரவு

Next Post

Israel vs Palestine | பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை.. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!

Next Post
Israel vs Palestine | பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை..  இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!

Israel vs Palestine | பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை.. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin