நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்தது. அதன் படி நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,10,160க்கும், கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கும் விற்பனையானது.


