கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில், ஐந்து ஓராங் அஸ்லி (Orang Asli) மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, மற்றும் A- தரங்களைப் பெற்று மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டத்தோ டாக்டர் முகமட் ஆசாம் அகமட் இன்று புத்ராஜயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விவரங்களை வெளியிட்டார்.
5 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ பெற்றுள்ளனர். அத்தோடு 133 மாணவர்கள் குறைந்தது ‘Credit’ (B+ முதல் C வரை) பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 1,768 ஓராங் அஸ்லி மாணவர்கள் SPM சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் (1,527 மாணவர்கள்) எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று அவர் சொன்னார்.
இதில் ஹென்றி கர்னி (Henry Gurney) மற்றும் செக்கோலா இன்டெக்ரிட்டி (Sekolah Integriti) பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ பெற்றுள்ளார். 99 மாணவர்கள் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேநேரம் செக்கோலா பிம்பிங்கன் ஜாலினன் காசி (SBJK): இந்தப் பள்ளியில் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2024-இல் 2-ஆக இருந்தது, தற்போது 2025-இல் 10-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செக்கோலா துனாஸ் பக்தி (Sekolah Tunas Bakti): ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் ‘Credit’ பெற்றுள்ளார். மொத்தம் 35 மாணவர்கள் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு முடிவுகள், பின்தங்கிய நிலையில் உள்ள மற்றும் சிறப்புச் சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.




