Last Updated:
சென்னை அணி சரிவிலிருந்து மீண்டு ஒரு கௌரவமான இலக்கை எட்டுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெ தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சாபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026-ன் 3-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 8 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருமே தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஆயுஷ் மத்ரே ரன் ஏதும் எடுக்காமலும், மேத்யூ ஷார்ட் 2 ரன்களுடனும் வெளியேறினர்.
அதிரடி வீரர் சர்ஃபராஸ் கான் 12 பந்துகளில் 17 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து அணியை மீட்க முயன்றார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவரும் ஆட்டமிழந்தார். நட்சத்திர வீரர் சிவம் துபே 6 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக நந்த்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதோடு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

