Last Updated:
இந்த மைதானத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ் வெற்றி பெறும் அணி பவுலிங் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த மேட்சில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை மும்பையும் வென்றிருந்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மூன்றாவது லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணியின் கேப்டன் ரயான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்
இதையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இந்த மைதானத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ் வெற்றி பெறும் அணி பவுலிங் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று டாஸ் வென்ற ராஜஸ்தானி பவுலிங் தேர்வு செய்துள்ளது
சென்னை அணியின் பிளேயிங் லெவன்-
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது


