Last Updated:
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று தனது மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளார்
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது எம்.எல்.சி பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.
கடந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார். அதன் பிறகு சில மாதங்களில் பதவியை தனது ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகி உள்ளார்.
10ஆவது முறையாக பிகாரின் முதலமைச்சராக சில மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற அவர், தேசிய அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதுடன், தனது மகனையும் மாநில அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 16ஆம் தேதி தேர்வான அவர், அடுத்த 14 நாள்களுக்குள் எம்.எல்.சி பதவியைத் துறக்க வேண்டும் என விதிகள் உள்ளதால் ராஜினாமா செய்தார்.
அதேநேரம் நிதிஷ்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Mar 30, 2026 12:25 PM IST
Nitish Kumar : சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய நிதிஷ்குமார்… பீகாரின் அடுத்த முதல்வர் யார்?


