Last Updated:
கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதன் கேப்டன் அஜின்க்யா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது.
ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இறுதி கட்டத்தில் ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரின் பங்களிப்பால் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரயான் ரிக்கெல்டன் ஜோடி வானவேடிக்கை காட்டியது. குறிப்பாக ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா தனது பழைய பாணியில் விஸ்வரூபம் எடுத்து, வெறும் 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய விக்கெட் கீப்பர் ரயான் ரிக்கெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Mar 29, 2026 11:31 PM IST

