Last Updated:
மிகச் சிறிய மைதானம் மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் ஏதாவது ஒரு அணி இந்த சீசனில் 300 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏதாவது ஒரு அணி 300க்கும் அதிகமான ரன்கள் குவிக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதுவும் 16 ஓவருக்கு உள்ளாக 202 ரன்கள் டார்கெட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எளிதாக சேசிங் செய்தது.
இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:
பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அதிக சாதகமாக உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்த அளவில் அதில் விராட் கோலி, பில் சால்ட் போன்ற அதிரடியான வீரர்கள் உள்ளனர்.
மேலும் இம்பேக்ட் பிளேயர் ஆட்ட விதிமுறை இருப்பதன் காரணமாக விக்கெட்டுகள் விழுந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் பேட்ஸ்மேன் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடுகின்றனர். இது மிகப் பெரிய ஸ்கோருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

