கெய்ரோ | மார்ச் 28, 2026
ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி படையினர் முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அதிரடி காட்டியுள்ளனர்.
பிப்ரவரி 28-இல் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணி ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய பிறகு, ஹூதிகள் நேரடியாக இஸ்ரேலை இலக்கு வைப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏமனிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையை இஸ்ரேலிய வான் பாதுகாப்புப் படை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்த நிலையில், ஹூதிகளின் இந்தத் தலையீடு போரை மேலும் நீட்டிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹூதிகள் செங்கடல் பகுதியிலுள்ள பாப் அல்-மண்டேப் நீரிணையை முடக்கினால், சூயஸ் கால்வாய் வழிச் செல்லும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளவில் கடும் பணவீக்கம் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.




