வடக்கு இஸ்ரேலில் உள்ள ஐன் ஷெமர் விமானத்தளம் மற்றும் ரெகாவிம் இராணுவ முகாம் ஆகியவற்றை “உயர்தர ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியதாக லெபனான் ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.
லெபனான் குடிமக்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், அவர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் மற்றும் லெபனான் வீடுகளை இடித்தல் ஆகியவற்றுக்குப் பதிலடியாக, சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ தளங்கள், துருப்புகள் மற்றும் எல்லைப்பகுதி நிலைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது.
வட இஸ்ரேல்
இவை பெரும்பாலும் லெபனான் எல்லையோரம் அல்லது வட இஸ்ரேலில் (கலிலி, ஹைஃபா அருகில்) நடந்துள்ளன.

சில தாக்குதல்கள் இஸ்ரேலின் Tel Aviv அருகிலுள்ள இராணுவ தலைமையகம் (Kirya), விமானப்படை தளங்கள் அல்லது ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா உரிமை கோரியுள்ளது.
இவை “பாதுகாப்பு நடவடிக்கை” அல்லது இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி என்று அவர்கள் விளக்குகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

