அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்த நீரிணை முடக்கப்பட்டால் இலங்கையில் உணவுப் பொருள்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சிம்பாப்வே 30 வீதம் விலை உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது. (a)
