நுருல் இசா அன்வார் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாமி பட்சில் மறுத்துள்ளார்.
‘இது ஒரு பொய் செய்தி’ என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்மாடாங் பாவ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது குறித்த யூகங்கள் இன்று காலை சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
“பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் மகளான நுருல் இசா, கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் 2025-2028 ஆம் ஆண்டு காலத்திற்கான கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடிப் போட்டியில் அப்போதைய துணைத் தலைவர் ரபிஸி ரம்லியை அவர் தோற்கடித்தார்.
அப்போதைய பொருளாதார அமைச்சராக இருந்த ரபிஸி, தனது தோல்வியைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
-fmt
