• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை
நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே
ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய
பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்று(28) காலை யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் குறித்த மலசல கூடத்தொகுதிக்கு நீர்
இணைப்பை வழங்கும் நோக்குடன் சென்றிருந்த நிலையில் அவர்கள் இ.போ. சபையினரால்
தடுக்கப்பட்டதை அடுத்தே பிரச்சினை உருவானது.



முன்பதாக பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில்
கடந்த ஆட்சிக்காலத்தில் இ.போ.சவினால் இந்த பொது மலசலகூட கட்டட
நிர்மாணத்துக்காக யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட மொழிவு
செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

மலசலகூடம் அமைக்கப்பட்ட இடம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கென குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட
இ.போ.சவின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த மலசலகூடம் அமைக்கப்பட்டது.

அத்துடன் பொது மலசலகூடம் கட்டடுவதற்கான அனுமதியையும் இ.போ.ச விடம் யாழ்.
மாநகரசபை கோரி பெற்றே இத்திட்டம் நிறைவுறுத்தப்பட்டது.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb


இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதியன்று குறித்த மலசலகூட தொகுதியை குத்தகைக்கு
விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ். மாநகரசபை, பத்திரிகை மூலம் கோரியிருந்தது.

இது குறித்து குறித்த தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

தன்னிச்சையாக நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் போராட்டம்


இதற்கு குறித்த நிலப்பரப்பை யாழ். பிரதேச செயலகம் தம்மிடம்
பாரப்படுத்தியுள்ளதாக மாநகரசபை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

எமக்குரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலகூடத்தை தன்னிச்சையாக
நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் நாம் சேவையை முடக்கிப் போராடி எமக்கான
நீதியைப் பெறுவோம் என இ.போ.ச. தரப்பினர் தெரிவித்தனர்.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb

காவல்துறையின் உதவியை நாடுவோம்

இதேவேளை இவ்விடயம் குறித்து யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூறுகையில்,

நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. இது ஒருவருக்கு என வரையறை செய்து
கொடுக்கவில்லை. எனவே மக்களுக்கான சேவைக்காக இந்த கட்டட தொகுதியை மாநகரசபை
நிர்மாணித்தது.

கட்டுமாணம் நடைபெறும் வரை எந்த பிரச்சினையும் வரவில்லை.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb

ஆனால் மக்கள்
பாவனைக்காக திறந்துவிடும் போதுதான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச தொடர்ந்தும் இடையூறாக இருந்தால் காவல்துறையின் உதவியுடன் சட்ட உதவியை நாடி
நாம் இந்த கட்டடத்தை திறந்தே தீருவோம் என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கருதப்படும் எட்டு வயது சிறுமி கைது; நால்வர் கைது | Makkal Osai

Next Post

தொடங்கியது ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா.. ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
தொடங்கியது ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா.. ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

தொடங்கியது ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா.. ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin